சிம்புவின் "ஈஸ்வரன்" படத்தின் முக்கிய அறிவிப்பு.! குஷியில் ரசிகர்கள்.!

It has been announced that the first single of Eeswaran, directed by Suchindran and starring Simbu, will be released on the 14th.

சுசீந்திரன்  இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 14-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “ஈஸ்வரன்”.பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்.பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வரும் 14-ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இது சிம்பு ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

unknown node