இன்று "கர்ணன் அப்டேட்".... இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட்..!

Composer Santosh Narayanan has announced on his Twitter page that there will be an update on the Karnan film starring Dhanush.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் அப்டேட் ஒன்று வரவுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து கர்ணன் படத்தின் அப்டேட் ஒன்று இன்று வரவுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக அது படத்திற்கான முதல் படலாகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

unknown nodeunknown node