மீண்டும் கொம்பன் இயக்குனருடன் இணையும் கார்த்தி..!!

Actor Karthi's 23rd film will be directed by Muthiah and produced by Surya.

நடிகர் கார்த்தியின் 23 வது படத்தை இயக்குனர் முத்தையா இயக்குவதாகவும் அந்த படத்தை சூர்யா தயாரிப்பதாகவும் தகவல்.

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தனது 23 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை குட்டி புலி, கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்குவது கிட்ட தட்ட உறுதியாகி விட்டதாகவும் அந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க வுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.