‘காதலர் தினத்தன்று கண்டன கடை அடைப்பு’… கவின் – பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ள ‘KISS’ டீசர்.!

கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் 'கிஸ்' திரைப்படம் எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய காதல் கதையை எடுத்துரைக்கிறது.

Kavin - Kiss

சென்னை : அறிமுக இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள ‘Kiss’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது.

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திரைப்படமான ‘KISS’ டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய காதல் கதையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி தங்கள் வேடங்களில் அழகாகத் தெரிவது மட்டுமின்றி அழகாக நடித்திருக்கிறார்கள்.

முதலில் காதலை எதிர்க்கும்படி, கதாநாயகன் கவினின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், இறுதியில் கதா நாயகியுடனான காதல் வயப்படும் கவனின் எதார்த்தமான காதலை இந்த டீசர் எடுத்துரைக்கிறது.

கடந்து ஆண்டு கவின் நடிப்பில் வெளியான ‘ப்ளடி பெக்கர்’ படத்தில் கடைசியாக நடித்த கவினுடன் பிரீத்தி அஸ்ரானி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வாரணம் ஆயிரம் மற்றும் உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் பணியாற்றிய நடன இயக்குனர் சதீஷ் மாஸ்டர் என்றும் அழைக்கப்படும் சதீஷ் கிருஷ்ணன் தான் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கவின் நடித்த ‘டாடா’, ‘ப்ளடி பெக்கர்’ போன்ற படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்த ஜென் மார்ட்டின், இந்த படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, படத்தை ராகுல் ஆஃப் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க, ஆர்.சி. பிரணவ் படத்தொகுப்பு செய்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்