அக்‌ஷய் குமாருடன் இணையும் கிருத்திக் ரோஷன்.!?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியான படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியான படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு.ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.

unknown node

இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த ஹிந்தி ரீமேக்கில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சுதா கொங்கராவே இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை ராதிகா மதன் நடிக்கிறார்.

unknown node

இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பிரபல நடிகரான கிருத்திக் ரோஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

unknown node

கிருத்திக் ரோஷன் இந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அவர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

இந்த படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு தமிழில் இசையமைத்திருந்த இசையமைப்பாளர் ஜிவி தான் இந்தி ரிமேக்கிற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய் குமாருடன் இணையும் கிருத்திக் ரோஷன்.!?