மௌன குரு படம் மூலம் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனராக அறிமுகமானார் சாந்தகுமார். அதன் பிறகு சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஆர்யாவை வைத்து மகாமுனி படம் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
unknown nodeஇந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் முதுகில் கத்தி குத்தப்பட்டதுடன் ஆர்யா அவரது நண்பரும் டாக்டருமான காளி வெங்கட்டை சந்திக்க செல்கிறார். அவர் ஆபரேஷன் செய்யவேண்டும் 8 ஆயிரம் கொடு என்கிறார். மயக்கமருந்து வேண்டாம் 1000 ரூபாய் தருகிறேன் அப்படியே எடுத்துவிடு என சொலவ்து போல காட்சி அமைந்துள்ளது.
இந்த ப்ரோமோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளாது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே தேதியில் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
unknown node