எகிறும் எதிர்பார்ப்பு! இட்லி கடை முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை இப்படம் இரண்டு கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.

idly kadai box office collection

சென்னை :தனுஷ் இயக்கி நடித்த ‘பா.பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படங்களைத் தொடர்ந்து, அவரது நான்காவது இயக்குநர் பணியாக ‘இட்லி கடை’ திரைக்கு வருகிறது. இந்த கிராமிய டிராமாவில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.மேலும், படத்தில் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை இந்தப் படத்தை இன்னும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் 52வது படமாக இது அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழா பரபரப்பாக நடைபெற்றது, அங்கு ரசிகர்கள் தனுஷின் இயக்கத் திறனைப் பாராட்டினர். படம் வரும் அக்டோபர் 1 அன்று தமிழ்நாடு, தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்தப் படம், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் தமிழ்நாட்டில் விநியோகம் செய்யப்படுகிறது. படத்தின் டிரைலர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதன் காரணமாகவே படத்தின் டிக்கெட் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியது. தற்போது வரை இந்தியாவில் 1,635 ஷோக்களில் ரூ.52 லட்சம் வசூல் செய்துள்ளது, 36,600 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் வேலூர் பகுதிகளில் மிகுந்த ஆர்வம் காட்டப்பட்டுள்ளது.

தனுஷின் சொந்த மண் தமிழ்நாட்டில் இந்தப் படம் வலுவான தொடக்கத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதல் நாள் வசூல் குறித்து பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள், அக்டோபர் 1 அன்று ரூ.15-20 கோடி வரை சேர் செய்யலாம் என்று கணிக்கின்றனர். ஆயுதபூஜை விடுமுறை காரணமாக 5 நாட்கள் லாங் வீகெண்ட் உள்ளது, எனவே, அந்த நாட்களில் படத்திற்கு அதிகமான வசூல் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.