வசூலில் ருத்ர தாண்டவம் ஆடும் காந்தாரா...6 நாட்களில் இவ்வளவு வசூலா?

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ.427.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

KantaraChapter1 Grossed 400Crs

டெல்லி :ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து, தயாரித்த “காந்தாரா: சாப்டர் 1” திரைப்படம், 2025 அக்டோபர் 2 அன்று உலகளவில் வெளியானது. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தபடி, வெளியான 6 நாட்களில் (அக்டோபர் 2 முதல் 7 வரை) ரூ.427.5 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் முதல் நாள் ரூ.61.85 கோடி, இரண்டாம் நாள் ரூ.45 கோடி, மூன்றாம் நாள் ரூ.40 கோடி, நான்காம் நாள் ரூ.35 கோடி, ஐந்தாம் நாள் ரூ.31.5 கோடி, ஆறாம் நாள் ரூ.33.5 கோடி என தினசரி வசூல்கள் குவிய படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வசூல், இந்தியாவுக்குள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளது.இந்த வசூல் மூலம் படம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. 2022ல் வெளியான “காந்தாரா” படத்தின் ஹிந்தி மொழி வாழ்நாள் வசூலை (ரூ.84 கோடி) 6 நாட்களிலேயே மீறி, ஹிந்தி வசூல் ரூ.93.25 கோடியாக உயர்ந்தது. மேலும், 2022 “காந்தாரா” படத்தின் உலகளாவிய வசூலை (ரூ.420 கோடி) விரைவாக கடந்து , கன்னடத் திரைப்படங்களில் இரண்டாவது அதிக வசூல் பெற்ற படமாக மாறியது.

இது “கே.ஜி.எஃப்: சாப்டர் 1” (ரூ.415 கோடி) படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்து, கன்னட சினிமாவின் வரலாற்றை மாற்றியுள்ளது. 2025 ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனைகள், கன்னட சினிமாவின் உலகளாவிய செல்வாக்கை வலுப்படுத்துகின்றன. படத்தின் வெற்றி, கர்நாடக கலாச்சாரம், மிஸ்டரி, ஆக்ஷன் கலந்த கதை, ரிஷப் ஷெட்டியின் நடிப்பு மற்றும் இயக்கத்தால் ஏற்பட்டது.

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த வசூல், படக்குழு, 500 கோடி விளிம்பை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கிறது. மொத்தமாக 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட காந்தாரா இரண்டாவது பாகம் வெளியான 4 நாட்களில் பட்ஜெட்டை மீட்டெடுத்துள்ளது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், வரும் நாட்களில் இன்னுமே வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.