நயன்தாராவின் அடுத்த திரைப்படம் எந்த இயக்குனருடன் தெரியுமா..??

It has been reported that actress Nayanthara will next be seen in a film directed by director Ariyavanan.

நடிகை நயன்தாரா அடுத்ததாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது காதலர் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள காது வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் அறிவழகன் நயன்தாராவிடம் கதை கூறினாராம் அதற்கான முன்பணிகளுக்கும் விறு விறுப்பாக நடைபெற்ற நிலையில், நயன்தாராவிற்கு வேறு திரைப்படங்கள் வந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போகிவிட்டதாம். தற்போது மீண்டும் அந்த படத்திற்கான வேலைகளை தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.