மிஷன் சாப்டர் 1 திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான 'மிஷன் சாப்டர் 1' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Mission_ Chapter 1 OTT

அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மிஷன் சாப்டர் 1’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஷன் சாப்டர் 1

இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம்மிஷன் சாப்டர் 1.இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை எமிஜாக்சன் நடித்திருந்தார்.

அபி ஹாசன், நிமிஷா சஜயன், பரத் போபண்ணா, ஜேசன் ஷா, இயல் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வெளியீடு மற்றும் விமர்சனம்

இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. அயலான் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் வெளியானாலும் கூட மிஷன் சாப்டர் 1 படமும் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது என்றே சொல்லலாம். வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான்! ‘லவ்வர்’ படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!

ஓடிடி ரிலீஸ்

இந்த திரைப்படத்தை திரையில் சென்று பார்க்காமல் தவறவிட்ட ரசிகர்கள் எப்போது படம் ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அவர்களுக்காகவே சூப்பரான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தின் ஓட்டிட்டி ரிலீஸ் தேதி பற்றி தான்.அதன்படி மிஷன் சாப்டர் 1  வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி  நெட்பிளிக்ஸ்  தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.