நடிகர் விஜயின் மார்க்கெட் இப்போது எவ்வளவு உச்சத்தில் இருக்கிறது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். தற்போது வசூல் சக்கரவர்த்தி அவர் தான். இதனால் விஜய்யை வைத்து ஒரு படமாவது தயாரிக்கவேண்டும் என பல தயாரிப்பு நிறுவனங்கள் விரும்பி வருகிறார்கள்.
unknown nodeஅந்த வகையில் நடிகர் ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர் பி சவுத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜயன் ஒரு படத்தை தயாரிக்க உள்ளாராம். சமீபத்தில் நடைபெற்ற ஆஹா OTT பிளாட்பார்ம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ஜீவா உறுதிப்படுத்தியுள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக பேசிய அவர் ” சூப்பர் குட் பிலிம்ஸ் 100-வது படத்தில் விஜய் சார் நடிக்க வாய்ப்பு உள்ளது. அவரிடம் 1 வாரம் முன்பு தான் பேசி உள்ளோம். ஆண்டவன் அருளால் அது நடக்கும். அதில் நான் சம்பளம் வாங்காமல் நடிக்க ரெடி” என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-அந்த நிகழ்ச்சியால் தான் எங்க அம்மாவின் பேர் கெட்டுப்போச்சி.! கதறும் ஜூனியர் அர்ச்சனா.!
unknown nodeவிஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பிறகு தான் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.