சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள திரைப்படம் பேட்ட. இத்திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படமும் தல அஜித்தின் விசுவாசம் திரைப்படமும் ஜனவரி 10 இல் வெளியாக உள்ளது.பேட்ட படத்தின் டீசர், பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளியிடப்பட்டது. அந்த ட்ரைலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படு ஸ்டைலாக தோற்றமளிக்கிறார். வசனங்களும், காட்சிகளும் ரசிகர்களை கவரும்படி அமைந்துள்ளது.இந்த ட்ரைலரை பார்த்து, தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, ராம் கோபால் வர்மா ஆகியோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU
unknown node