நடிகர் சிபிராஜ் தற்போது நடித்துவரும் புதிய திரைப்படம் ரேஞ்சர். இப்படத்தை தரணிதரன் என்பவர் இயக்கி வருகிறார். இதற்கு முன்னர் பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். ரம்யா நம்பீசன் இப்படத்தை ஹீரோயினாக நடித்து வருகிறார்.
unknown nodeஇந்த போஸ்டரில் ஒரு புலி நடந்து வருவது போலவும் இந்தப்பக்கம் துப்பாக்கியை மறைத்து வைத்து சிபிராஜ் நிற்பது போலவும் உள்ளது. கீழே ‘இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது’ என எழுதப்பட்ட வாசகம் உள்ளது. இப்படம் எந்த மாதிரியான கதை அம்சத்தை கொண்டுள்ளது என தெரியவில்லை. அனேகமாக காட்டுக்குள் நடக்கும் சில சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது என தெரிகிறது.