விமர்சனங்களுக்கு இசை மூலம் பதிலடி! 'GOAT' படத்தால் நெகிழ்ந்த யுவன்!

GOAT படத்தில் சிறப்பாக இசையமைத்துள்ளதாக யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் நெகிழ்ச்சியுடன் ரசிகர்கள் மற்றும் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

yuvan shankar raja tnx to fan

சென்னை :GOAT படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு வெளியான பாடல்களுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது என்றே சொல்லலாம். இதன் காரணமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்ரோல் செய்யப்பட்டார்.

பாடல்கள் சரியாக வரவில்லை என விமர்சனங்கள் எழுந்த காரணத்தால், படத்தின் பின்னணி இசை எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. ஆனால், படத்தின் பின்னணி இசையை பார்த்த பிறகு கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜாவை பாராட்டுவார்கள் என வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

வெங்கட் பிரபு கூறியதை போல படத்தின் பின்னணி இசையையும், பாடல்களை படத்துடன் பார்த்த பிறகு பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமையாக இருக்கிறது என பாராட்டி வருகிறார்கள். தனக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவை அனைத்திற்கும் பின்னணி இசை மூலம் யுவன் பதிலடி கொடுத்துள்ளார் என அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த அளவுக்கு கோட் படத்திற்கு தேவையான பின்னணி இசையை வழங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார். விமர்சித்தவர்கள் கூட அவருடைய பின்னணி இசையை பாராட்டி வரும் நிலையில், யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சியுடன் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ” அன்பிற்கு மிக்க நன்றி தோழர்களே. அர்ச்சனா, ஐஸ்வர்யா, அகோரம் சார் நீங்கள் நம்ம தளபதி நடிகர் விஜய் மீது என் அன்பை வெளிப்படுத்த இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக எனக்கு பிடித்த சகோதரர் வெங்கட் பிரபு இல்லாமல் இது நடந்திருக்காது” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

unknown node

YUVAN TQ [File Image]