3 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகும் சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்'.!

It has been announced that the movie 'Server Sundaram' starring Santhanam will be released in February.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் படத்தினை வரும் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம்.பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது பாரிஸ் ஜெயராஜ்,டிக்கிலோனா ,சபாபதி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி இவரது நடிப்பில் பல ஆண்டுகளாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் சர்வர் சுந்தரம்.

கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தினை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ், வைபவி ஷிந்திலியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல முறை ரிலீஸ்க்கு தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் படத்தினை வரும் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது சந்தானம் ரசிகர்களைடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

unknown node