சர்காரு வாரி பாட்டா படத்தின் டிரைலர் வெளியீடு.!

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சர்காரு வாரி பாட்டா.” இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சமுத்திரகனி, நதியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்திலிருந்து வெளியான கலாவதி பாடல் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம்.
இந்நிலையில், தற்போது படத்திற்கான டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரில், சண்டைக்காட்சிகளுடன் மகேஷ் பாபு பேசும் வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படம் வரும் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025