தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வட்டாட்சியர் சீல்வைத்துள்ளார்.தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அச்சங்க தலைவர் விஷால் மீது குற்றம் சாட்டினர். இந்த முறைகேடுகள் தொடர்பாக விஷால் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி, சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் பூட்டு போட்டு விட்டு சென்று விட்டனர்.
unknown nodeஇந்நிலையில் இன்று சென்னை தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நடிகர் விஷால் வந்தார்.விஷால் மீது குற்றச்சாட்டுகள் கூறி, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று பூட்டு போடப்பட்ட நிலையில், பூட்டை அகற்ற விஷால் முயற்சி செய்தார் .இதனால் அலுவலக வாசலில் நிற்கும் போலீசாருடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் விஷால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிர்தரப்பினரால் போடப்பட்ட பூட்டை பதிவுத்துறை அதிகாரிகள் திறந்தனர்.
unknown nodeஇதன் பின் விஷால் மீது 2 பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.சட்ட விரோதமாக கூடுதல் மற்றும் பிரச்சினைக்குரிய சொத்துக்கள் குறித்து தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதன் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில் தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வட்டாட்சியர் சீல்வைத்துள்ளார். இதன் பின்னர் வட்டாட்சியர் கூறுகையில், இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சகட்ட மோதலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.