வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கும் சிலம்பரசன்..??

It has been reported that actor Simbu will next be seen in a film directed by Vetri Maran.

நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றார். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படம், மேலும் பத்து தல, இயக்குனர் சுசீந்திரன் மற்றும் ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என்று பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது, கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகர் சிம்பு இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் வெற்றி மாறன் தற்போது சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறது. அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவார். இதனால் சிம்புவை வைத்து திரைப்படம் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கும் சிலம்பரசன்..??