சிம்பு தற்போது மாநாடு படத்திற்காக அசத்தலான புது லுக்கில் தற்போது உள்ளார்.
கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் அவர் பெரிய மீசையுடன் புது லுக்கில் இருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் அடுத்து பட்டாஸ் திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது வேகமாக மதுரையில் நடைபெற்று வருகிறது. அதற்காக தற்போது புதிய கெட்டப்பில் தனுஷ் இருக்கிறார் என ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
unknown nodeஅதேபோல வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள திரைப்படம் மாநாடு. இந்த படம் வெகு நாட்களாக ஷூட்டிங் ஆரம்பிக்காமல் இருந்து தற்போது இப்பட ஷூட்டிங் ஆரம்பிக்க பட உள்ளது. இப்படத்திற்க்காக பழைய கெட்டப்பில் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். அந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.