“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!
தான், 'நீ சிங்கம் தான்' எனும் பாடலை அடிக்கடி கேட்பதாக கூறிய விராட் கோலிக்கு "நீ சிங்கம் தான்" என அவரை டேக் செய்து பதிவிட்டுள்ளார் STR.

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி. தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில் பாதி நிறைவுற்ற நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி, விராட் கோலியுடனான ஒரு கலந்துரையாடல் வீடீயோவை பதிவிட்டுள்ளது.
அதில், விராட் கோலியிடம் நீங்கள் அதிகமாக தற்போது விரும்பி கேட்கும் பாடல் எதுவென்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கோலி, தனது மொபைல் போனில் உள்ள மியூசிக் பிளேயரை காண்பித்தார். அதில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்று இருக்கும் “நீ சிங்கம் தான்” எனும் பாடலை நான் அதிகம் கேட்பதாக கூறியிருப்பார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் சித் ஸ்ரீராம் இப்பாடலை பாடியிருப்பார்.
அதே பாடலை விராட் கோலிக்கு பாராட்டு வீடியோ போடுவது போல அதனை விராட் கோலி பயிற்சி, அவர் பேசுவது என பதிவிட்டு வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது.விராட் கோலியின் இந்த பதில் மற்றும் இந்த பாடல் மீண்டும் வைரலாக பேசப்பட்டது.
இதனை கண்ட பத்து தல படத்தின் ஹீரோ சிலம்பரசன் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பதிவிட்டு இருந்த அந்த வீடீயோவுக்கு பதில் அளிக்கும் வகையில் நீ சிங்கம் தான் என விராட் கோலியை டேக் செய்து பதிவிட்டு இருந்தார். STR-ன் இந்த பதிவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Nee singam dhan @imVkohli ❤️🔥🦁 https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025