அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!!

Sun Pictures has released the shooting spot photo of the movie Annatha

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் நயன்தாராவும், ரஜினியும் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக 1 வாரம் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவர்க்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது, ஆனால் ரஜினிக்கு இரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதற்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

unknown node