ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்ட சூர்யா 40 படக்குழு ...?

The first phase of filming is reported to end on April 14

சூர்யா 40 படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி முடிவடையவுள்ளதாக தகவல்.

நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் நடிகர் சூர்யா இந்த வார இறுதிக்குள் கலந்துகொள்வார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி முடிவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.