'அடங்க மறு' இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.!

Surya is said to be next in line to star in a re-directed film directed by Karthik Thangavel

சூர்யா அடுத்ததாக அடங்க மறு பட இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடித்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி கூட்டத்தில் ஒருத்தன் பட இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40-வது படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் .

அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திலும் , சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் சூர்யா அடுத்ததாக அடங்க மறு இயக்குனருடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது .அதாவது சூர்யா அடுத்ததாக அடங்க மறு படத்தினை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளதாகவும் , அந்த படத்தினை சூர்யாவே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.அதற்கான திரைக்கதை எழுதும் பணிகளில் இயக்குனர் மும்முரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.