சுல்தான் படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா பாராட்டி ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை நேற்று முன்தினம் படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்த ட்ரைலரை பார்த்த நடிகர் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான நடிகர் சூர்யா டிரைலரை பாராட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார் இந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பது ” டிரைலர் பட்டையை கிளப்புது. படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்த படம் இது ஒரு சரியான கோடைகால பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node