தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.!

ராட்சசன், பேச்சுலர் பட தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tamil film producer DIlli Babu

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டில்லி பாபு காலமானார். அவருக்கு வயது 50. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

இந்நிலையில், பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10.30 மணியளவில் உடல் கொண்டுவரப்பட்டு, மாலை 4.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

அவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தியை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.

டில்லி பாபு தனது தயாரிப்பு நிறுவனமான ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி மூலம், ராட்சசன் மற்றும் மரகத நாணயம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார். பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ‘உறுமீன்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
athirasam (1)
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW
Kavarapettai Train accident
Mohammad Shami