'டார்ஸான்' பட நடிகர் ஜோ லாரா விமான விபத்தில் உயிரிழந்தார்.!

Famous actor Joe Laura and his wife Gwen Champlin Laura died in a plane crash.

பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா விமான விபத்தில் உயிரிழந்தனர்.

கடந்த 1989 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி திரைப்படமானடார்சன் இன் மன்ஹாட்டனில்டார்சானாக நடிகர் ஜோ லாரா நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து 1996-1997 வரை  டார்சன் தி எபிக் அட்வெஞ்சர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் ரூத்தர்ஃபோர்ட் பகுதியிலிருக்கும் மீட்புக் குழுவினர்  இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. மேலும், தற்போது யாரும் உயிரோடு இருப்பதாகத் தாங்கள் கருதவில்லை என்றும், உடைந்த விமான பாகங்கள் மற்றும் அதில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடி வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.