வலிமை படத்தின் டப்பிங் பணிகளை முடித்த தல அஜித்..!!

Actor Ajith Kumar is said to have completed the dubbing work for the movie Valimai

வலிமை படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் அஜித்குமார் முடித்துள்ளதாக கூறபடுகிறது.

வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், அதிரடி சண்டைக்காட்சி ஒன்று வருகின்ற ஏப்ரல் மாதம் 10 நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது வலிமை படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் அஜித்குமார் முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். ஜான்வி கபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு, வி.ஜே பானி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்த படத்திற்கு.