புத்தாண்டு தினத்தன்று தல அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்..?

It has been reported that the motion poster of the upcoming movie Valaimai starring Ajith will be released on the eve of New Year.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாவதாக தகவல்.

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பேர்லி மன்னி உள்ளிட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு அப்டேட் கூட வெளியாகாத காரணத்தால் அஜித் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர், அதனை தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தின் இசை பணிகள் தொடங்கியதாக அறிவித்தது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் தற்போது அதனை தொடர்ந்து அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.