நடிகர் டெல்லி கணேஷின் உடல் இன்று நெசப்பாக்கத்தில் தகனம்!
அவரது உடலுக்கு நடிகர்கள் கார்த்தி, செந்தில், ராதாரவி, சந்தான பாரதி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் இறுதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக காலமானார். 80 வயதான அவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். இந்நிலையில், டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும், அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர்கள் கார்த்தி, செந்தில், ராதாரவி, சந்தான பாரதி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் இறுதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
தற்பொழுது, டெல்லி கணேஷின் இறுதிச் சடங்குகள் இன்று காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. மேலும், இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் ராமபுரத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெசப்பாக்கத்தில் தகனம் செய்யப்படுகிறது.
இதனிடையே, அரசு மரியாதியுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025