"இது ஒரு சரியான மாஸ் சாங்" ... ரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை அப்டேட் கொடுத்த யுவன் .!

The first song of the movie Valimai is said to have been written by director Vignesh Sivan and used by drummers in Orissa for the song.

வலிமை திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகவும், இந்த பாடலுக்காக ஒரிசாவில் ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞர்களை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் .எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது . அப்டேட்டை காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பைக் ரேஸ் காட்சிகளும், ஸ்டண்ட், காட்சிகளும் அதிகமுள்ள வலிமை படத்திலிருந்து ஏற்கனவே தல அஜித் பைக் ரேஸ் செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் நேற்று வலிமை படத்தில் அஜித் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் ஓப்பனிங் சாங் குறித்த தகவலை யுவன் சங்கர் ராஜாவின் சொந்த இணையதளமான u1records.com இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஆம், வலிமை படத்தின் முதல் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகவும், இந்த பாடலுக்காக ஒரிசாவில் ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞர்களை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு செரியான மாஸ் சாங்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வலிமை அப்டேட் வராமல் இருந்த நிலையில் இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு தற்பொழுது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

unknown node