பீஸ்ட் படத்திற்காக பூஜா ஹெக்டேவை தேர்வு செய்ய காரணம் இதுதான்.!- நெல்சன் திலீப் குமார்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

unknown node

சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

unknown node

இந்த நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவை தேர்வு செய்ததற்கான காரணத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கூறியுள்ளார். இது குறித்து கூறியது ” பீஸ்ட் படம் தொடங்கும்போது, பூஜாவுக்கு தெலுங்கில் `அல வைகுந்தபுரம்லு’ வந்திருந்தது. அதுல பூஜா கலக்கியிருந்தாங்க. ஹீரோயின் தேடுதல்ல விஜய் சாருடன் இதுவரை அவரோடு நடிச்சிராதவங்களா இருக்கணும்.

unknown node

அவரோட உயரத்துக்குப் பொருத்தமா இருக்கணும்னு பார்க்கறப்ப பூஜா பொருத்தமா இருந்தாங்க. அவங்களும் ரொம்ப கடின உழைப்பாளி. அவங்களுக்குத் தமிழ் தெரியலைன்னாலும்கூட, டயலாக் பேசுறப்ப தமிழைக் கத்துக்கிட்டு உச்சரிச்சாங்க” என தெரிவித்துள்ளார். நாளை மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் டிரைலர் மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.