தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். அனைத்து மதங்களையும், சாதிகளையும் மதிக்க வேண்டும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு அஜித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அஜித்குமார் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அஜித் குமார், ” பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தான் தனது இதயம் இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என வேண்டிக் கொள்வதாகவும், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். அனைத்து மதங்களையும், சாதிகளையும் மதிக்க வேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது. வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு, அமைதியாக வாழ அனைவரும் பிரார்த்திப்போம்” என்று பேசியிருக்கிறார்.