லியோவை மிஞ்சிய தக் லைஃப்! மிரள வைக்கும் வியாபாரம்?

சென்னை : லியோ படத்தை விட தக் லைஃப் திரைப்படம் வெளிநாட்டு உரிமைகள் அதிக கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட் சினிமாவில் இதுவரை வெளிநாட்டு உரிமைகள் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட திரைப்படங்கள் என்றாலே விஜய் நடித்த லியோ படம் தான். லியோ திரைப்படம் கிட்டத்தட்ட 60 கோடிகளுக்கு வெளிநாட்டு உரிமைகளுக்கு திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இது தான் தமிழ் சினிமாவில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படமாகவும் இருந்தது.
இந்த நிலையில், தற்போது அந்த படத்தையே கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படம் மிஞ்சியுள்ளது. அதன்படி, தக் லைஃப் திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்கு விற்பனை உரிமையை ஏபி இன்டர்நேஷனல் நிறுவனமும், ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 63 கோடி கொடுத்து தக் லைஃப் படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், இதுவரை தமிழ் சினிமாவில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படம் என்ற லியோவின் சாதனையை தக் லைஃப் படம் முறியடித்து அதிக தொகைக்கு விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
தக் லைஃப் படம் இந்த அளவுக்கு விற்பனை செய்ய ஒரு காரணம் கமல்ஹாசன் என்றாலும் மற்றோரு காரணம் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபலங்களும் ஒரு காரணம் என்றே கூறவேண்டும். ஏனென்றால், படத்தில் சிலம்பரசன் டிஆர், த்ரிஷா, கவுதம் கார்த்திக், அபிராமி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு இன்னுமே அதிகமானது என்றும் சொல்லவேண்டும். எனவே, தான் தக் லைஃப் படத்திற்கு இந்த அளவுக்கு வியாபாரம் வந்து இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025