ஹாலிவுட் படக்குழுவினருடன் நம்ம ஜி.வி.பிரகாஷ் குமார்! ட்ராப் சிட்டி அப்டேட்!

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் திகழ்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.  இவர் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் திகழ்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.  இவர் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வரும் 4ஆம் தேதி 100 % காதல் திரைப்படம் வெளியாக உள்ளது.

unknown node

இதனை அடுத்து தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் ஜி.வி நடிக்க உள்ளார். ட்ராப் சிட்டி என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ப்ரண்டன் டி,ஜாக்சன் என்ற ஹாலிவுட் நடிகர் உடன் ஜி.வி நடிக்க உள்ளார்.  இப்படத்தில் நடிப்பதற்காக தற்போது ஹாலிவுட் படக்குழுவினருடன் திரைப்படம் பற்றி கலந்தாலோசித்து வருகிறார். இந்த படத்தின் கதை விவாதம் முடிந்து விரைவில் பட ஷூட்டிங் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.