வலிமை ஃபர்ஸ்ட் லுக் ஒத்திவைப்பு..! போனி கபூர் அறிவிப்பு..!!

Producer Bonnie Kapoor has announced on her Twitter page that she is postponing the strength first look.

வலிமை ஃபர்ஸ்ட் லுக் ஒத்திவைப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித் குமாரின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம். அந்த அறிவிப்பு வெளிவரும்போது, கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து உற்றார், உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

இத்தயை அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ், இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின்படி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும் பாதுகாப்புக்காவும் பிராத்திப்போம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது சோக்கத்தில் உள்ளார்கள்.

unknown node