வெற்றிமாறன் தயாரிப்பில் வாடிவாசல் கதைக்களத்தில்.. மிரட்டலாக வெளியான புத்தம் புது ட்ரைலர்..!

By

இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், அதே ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் கதைகளைத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள “பேட்டைக்காளி” எனும் வெப் சீரிஸை தயாரித்துள்ளார்.

இந்த தொடரை அறிமுக இயக்குனர் ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் கிஷோர், கலையரசன், வேல ராமமூர்த்தி, ஷீலா உட்பட பலர் நடித்துள்ளனர். ‘மேற்கு தொடர்ச்சி மலை’ அந்தோணி நாயகனாக நடித்துள்ளார். இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த வெப் சீரிஸ் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து தற்போது அதற்கான டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரில் வரும் காட்சிகள் மற்றும் பின்னணி இசை மிகவும் அருமையாக இருந்ததால் இந்த வெப் சீரிஸின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Dinasuvadu Media @2023