பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது.
unknown nodeசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது.
unknown nodeஅதனால் சென்னைக்கு விசில் போட, ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வமாகி வருகிறார்கள்.
unknown nodeஅணிக்கு ’தல’ தோனி மீண்டும் கேப்டனாகி இருக்கிறார்.
unknown node’சின்ன தல’ ரெய்னா, சுழல்கள் ஜடேஜா, ஹர்பஜன் சிங், கரண் சர்மா, ஆல் ரவுண்டர் பிராவோ, வாட்சன், ஓபனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய், அதிரடி வீரர்கள் அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், இளம் வேகங்கள் லுங்கி நிகிடி, மார் வுட், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் என ஒரு அதிரடி கூட்டணி ஆர்ப்பாட்டமாக களமிறங்குகிறது.
unknown nodeமுதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன, மும்பை வான்கடேவில்!போட்டிக்கு பத்து, பதிமுன்று நாள் இருந்தாலும் சென்னையில் இப்போதே பயிற்சியில் இறங்கிவிட்டது, தோனி படை.சுரேஷ் ரெய்னா, பிராவோ உட்பட பெரும்பாலான வீரர்கள் சென்னை வந்துவிட்டார்கள்.
unknown nodeநட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் இவர்கள், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று வலைப்பயிற்சியை மேற்கொண்டார்கள்.
unknown nodeதோனிக்கு கேரளாவின் இளம் பந்துவீச்சாளர் ஆசிப் பந்துவீசினார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்திடம் பயிற்சிப்பெற்றுள்ள ஆசிப்புக்கு தோனி, சில ஆலோசனைகளைக் கூறினார். பின்னர் அம்பாதி ராயுடுவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.
unknown nodeபயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், வரும் 27-ம் தேதி அணியில் இணைந்து கொள்ள இருப்பதால் அதுவரை பந்துவீச்சு பயிற்சியாளர் எல். பாலாஜி கவனித்துக்கொள்வார் என்று தெரிகிறது.
unknown nodeஇரண்டு ஆண்டுக்குப் பிறகு அணி களம் காணுவதால், முதல் போட்டி முக்கியம். அந்தப் போட்டியில் வென்றால் தன்னம்பிக்கையுடன் அடுத்தடுத்த போட்டிகளில் வீரர்கள் களமிறங்குவார்கள்.
unknown nodeஅதனால், அந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்கிற ஆவலில் இப்போதே அணியினர் பயிற்சியை தொடங்கிவிட்டனர்’ என்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.