ஐபில் 2019:சிறப்பாக விளையாடிய மும்பை அணியின் தொடக்க ஜோடி!சொதப்பிய மிடில் ஆர்டர்

ipl 2019: The opening pair of the Mumbai team's best pair

177 ரன்கள் இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

இன்றைய  ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் சிறப்பாக அமைந்தது.தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டி-காக் களமிறங்கினார்கள்.அதிரடியாக விளையாடிய இருவரும் ஒருகட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.ரோகித் 32 ரன்களிலும்,டி-காக் 60 ரன்களிலும் வெளியேறினார்கள்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஜொலிக்க தவறினார்கள்.யுவராஜ் 18 ,சூரியகுமார் 11,பொல்லார்ட் 7,க்ருனால் பாண்டியா 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.     ஓரளவு தாக்கு பிடித்த ஹர்டிக் பாண்டியா 31 ரன்கள் அடித்தார்.

unknown node

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் அடித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் முருகன் அஸ்வின்,சமி,ஹார்டஸ்  தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.இதன் பின்னர் 177 ரன்கள் இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.