பெங்களூரு அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் தொடர் கோலாலகமாக ஆரம்பித்தாலும், அதன் தாக்கம் இன்னும் ரசிகர்கள் மனதில் வராததற்கு காரணமாக இருந்தது, சென்னை , மும்பை எனும் இரு பெரும் துருவங்களும் தொடர் தோல்விகளை பெற்றுள்ளது தான் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த களங்கத்தை துடைக்க இன்று சென்னை அணி , போங்களூரு அணியுடன் மோத தயாரானது.
unknown nodeமுதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் வழக்கம் போல சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், உத்தப்பா கடைசி வரை தாக்குப்பிடித்து 88 ரன்கள் விளாசினார். அவரை விட ஒருபடி மேல் சென்று சிவம் துபே 46 பந்துகளில் 95 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது.
unknown node20 ஓவரில் 217 எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே தடுமாற்றம் தான். அதிரடி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பி கொண்டிருந்தனர். இருந்தாலும் ரன்கள் கணிசமாக உயர்ந்த வண்ணம் இருந்தது. சுயாஸ், தினேஷ் கார்த்திக் கொஞ்சம் பயமுறுத்தினாலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
unknown nodeஇறுதியாக 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 193 ரன்கள் எடுத்துவிட்டது பெங்களூரு அணி. இதன் காரணமாக 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஐபிஎல் 2022இல் முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.