இன்றைய ஐபில் போட்டியில் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்று வரும் 20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்றடெல்லி கேபிடல்ஸ் அணிகேப்டன் ஸ்ரேயாஸ்பந்துவீச்சைதேர்வு செய்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத்திலே விக்கெட்டை பறிகொடுத்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் மற்றும் மொயீன் அலி மட்டும் ஓரளவு தாக்கு பிடித்தனர்.மற்றவர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை.
unknown nodeஇறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கேட்டை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் 41,மொயீன் அலி 37 ரன்கள் அடித்தனர்.டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கவுள்ளது.