RRVSKKR: டாஸ் வென்ற கொல்கத்தா !நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராஜஸ்தான் அணி

RRVSKKR: Rajasthan Royals to play moderate matches

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  21-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்    அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று  மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்கு போட்டிகளிலும் 1 வெற்றி மட்டுமே பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்அணி வீரர்கள் விவரம்:அஜிங்கியா ரஹனே(கேப்டன்), ஜோஸ் பட்லர் , ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், பிரசாந்த் சோப்ரா, கிருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷீயாஸ் கோபால், தவாள் குல்கர்னி, சுதேசன் மிதுன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி வீரர்கள் விவரம்: கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன்), சல்மான் கில், ஆண்ட்ரே ரசல், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி கர்னி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

unknown node

இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ஸ்மித் 46*,திரிபாதி 5* ரன்களுடன் உள்ளனர்.பட்லர் 37,ரகானே 5 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் கிருஷ்ணா,ஹாரி தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.