பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு...மீறினால் நடவடிக்கை...!

A time limit has been imposed on fireworks in Chennai on the day of Diwali

தீபாவளி தினத்தன்று சென்னையில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவுள்ளதாகவும்,இந்த நேரக்கட்டுப்பட்டை மீறி பட்டாசு வெடித்தால் மாநகர காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,பொதுப்போக்குவரத்தில் பட்டாசுகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை எனவும்,மீறினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தி.நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நகைதிருட்டை தடுக்க 800 போலீஸ் கொண்ட தனிப்படை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சங்கர் ஜிவால் அவர்கள் கூறியுள்ளார்.