நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே கொண்டாட அனுமதி...! புத்தாண்டு கட்டுப்பாடு ...!காவல்துறை அறிவிப்பு ...!

சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளது  சென்னை காவல்துறை. இது தொடர்பாக நட்சத்திர விடுதிகளுக்கு

சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளது  சென்னை காவல்துறை.இது தொடர்பாக நட்சத்திர விடுதிகளுக்கு சென்னை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் நள்ளிரவு 1 மணியோடு புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் .மது விற்பனை செய்ய வழங்கப்பட்ட லைசென்ஸ் அடிப்படையிலேயே மதுவை வழங்க வேண்டும்.பெண் வாடிக்கையாளர்களை கையாள பெண் பாதுகாவலர்களை நட்சத்திர விடுதிகள் அமைக்க வேண்டும்.நீச்சல்குளம் அருகே புத்தாண்டு கொண்டாட ஏற்பாடு செய்யக்கூடாது, நீச்சல் குளத்தில் குளிக்கவோ விளையாடவோ அனுமதிக்க கூடாது  என்றும் சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.