ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

Police are investigating the suicide of Sadiq Badshah, an armed guard near the lower part of Chennai.

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே ஆயுதப்படை காவலர் சாதிக் பாட்ஷா தூக்கிட்டு தற்கொலை குறித்து போலீசார் விசாரணை.

சென்னை கீழ்பாக்கத்தில் ஆயுதப்படை காவலர் சாதிக் பாஷா (26) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த சாதிக் பாஷா சென்னை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார்.

தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்டார். காவலர் சாதிக் பாஷா உடலை கைப்பற்றி தலைமை செயலக காலனி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.