#BREAKING: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Chennai Meteorological Department has issued a red alert for 4 districts in Tamil Nadu.

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

கனமழை பெய்து வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டங்களில் மழை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.