சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பையால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
unknown nodeவிமான நிலைய வருகைப் பகுதி நுழைவு வாயில் ஒன்றின் அருகே கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பையால் அச்சம் நிலவியது. சி.ஆர்.பி.எஃப்.,வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வரவழைக்கப்பட்டனர். பொருள் இருந்த பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்கு யாரும் நுழையாத வண்ணம் தடுப்புக்கள் அமைக்கப்பட்டன. விமான நிலையத்தில் பயணிகளுக்காக வந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
unknown nodeஅதை 20 நிமிடங்களுக்கு மேலாக ஆய்வு செய்த வீரர்கள், அதில் வெடிக்கும் பொருள் எதுவும் இல்லை என உறுதி செய்ததையடுத்தே அங்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பயணி யாரோ தவற விட்டுச் சென்ற உடமை என தெரிவித்த அதிகாரிகள், அங்குள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
DINASUVADU