ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஓட்டு போடவேண்டும் !

ஆர்.கே.நகர் தேர்தலில் தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் தேர்தலில் தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

unknown node

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் இருக்கும் பாஜக செயற்பாட்டாளர்களிடம் களநிலவரம் பற்றி கேட்டறிந்தேன். திமுக – தினகரனுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிவித்தார்கள். அப்படியென்றால், தமிழர்கள் தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

source:     www.dinasuvadu.com