சென்னை மற்றும் தேனி மாவட்டங்களில் பரவலாக மழை ...!

சென்னை மற்றும் தேனி மாவட்டங்களில் மழை  வருகிறது.

சென்னை மற்றும் தேனி மாவட்டங்களில் மழை  வருகிறது.

சென்னை  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடலோர பகுதிகளில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை உள்மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது .அதேபோல் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கண்டமனூர், அல்லிநகரம், பெரியகுளம், விடுகபட்டி உள்ளிட்ட இடங்களில்   மழை பெய்து வருகிறது.