15ம் தேதி பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும்...!சென்னை வானிலை ஆய்வு மையம்

வருகின்ற 15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருகின்ற 15ம் தேதி பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக   சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிவிப்பில்,நவம்பர் 15 ஆம் தேதி பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் பலத்த காற்று வீசும். சென்னைக்கு நேரடி பாதிப்பு இருக்காது ஆனால் மழை இருக்கும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.