கஜா புயல் பாதிப்பு ...!ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நவம்பர் மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கினார்...!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமது நவம்பர் மாத சம்பளத்தை வழங்கினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமது நவம்பர் மாத சம்பளத்தை வழங்கினார்.

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.

புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமது நவம்பர் மாத சம்பளத்தை வழங்கினார்.